ATM- யில் பண மோசடி காட்டிக் கொடுத்த CCTV

x

திருக்கோவிலூரில் ATM கார்டை மாற்றி, 25 ஆயிரம் ரூபாய் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கலா என்பவரின் 40 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்வதுபோல் செய்து, அவரது ATM கார்டை மாற்றி, எலவனாசூர் கோட்டை வாஹித்கான் (Wahid Khan)என்பவர் 25 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். இது குறித்து மேசேஜ் மூலம் அறிந்த கலா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மற்றும் ATM சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பல ATM கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்பு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்