ஆஹா.. அழகோ அழகு" கொட்டும் மழையிலும் குடையோடு படையெடுக்கும் கூட்டம்

x

உதகையில் விட்டு விட்டு பெய்யும் மழைக்கு நடுவே, சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் 6வது நாளாக மலர் கண்காட்சி நடந்தது. இதனிடையே, பெய்துவரும் மழையால், உதகை முழுவதும் ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை குடை பிடித்தவாறு ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அடர்த்தியான மேகமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்