காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மாதங்களில் புதுமணத் தம்பதி தற்கொலை

x

திருமணமான இரு மாதங்களில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதி பூச்சி மருந்து சாப்பிட்டு ஒன்றாக தற்கொலை

கட்டிய மஞ்சள் கயிறின் நிறம் கூட மாறவில்லை அதற்குள் மரணம்

சிவகங்கை திருப்புவனம் குயவன் கோயில் தெருவைச் சேர்ந்த வினோத் குமார் 22. இவரின் மனைவி பவித்ரா 18, இருவரும் திருமணத்திற்கு முன்பு தனியார் சேம்பரில் வேலை பார்த்து வந்துள்ளனர் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக இரு விட்டாலும் இணைந்து ஜாதகம் பார்த்துள்ளார்கள்ஒ, ஆனால் வினோத்துக்கு செவ்வாய் தோஷம் இருந்துள்ளது ஜாதக பொருத்தம் இல்லாததால் இரு வீட்டாரும் நிராகரித்து விட்டனர்.

ஆனால் வினோத் குமாரும் பவித்ராவிற்கும் பிடித்து போனதால் இருவரும் இரு வீட்டாருக்கும் தெரியாமல் இரு மாதங்களுக்கு முன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வினோத்குமார் வீட்டு மாடியில் அவர்கள் வசித்து வந்தனர்.

ஆனால் வினோத்குமார் மனைவி வீட்டுடன் பேச மாட்டார் ஆனால் பவித்ரா அவர் அம்மா அப்பாவுடன் பேசி வந்துள்ளார் .

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாக்காக மனைவியை மாமியார் வீட்டில் கொண்டு சென்று விட்டு வந்துள்ளார் மூன்று நாட்களாக வரவில்லை, கணவன் பொய் கூப்பிடவே பவித்ரா உடனே வந்து விட்டார்

அடிக்கடி இரு விட்டார்களும் வினோத் மற்றும் பவித்ராவை திட்டியுள்ளனர்

இந்நிலையில் நேற்று முன்தினம் மறுபடியும் வினோத் பெற்றோர் திட்டியதால் வினோத் குமார் மற்றும் பவித்ராவும் இருவரும் இணைந்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். இருவரையும் மீட்டு நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்தனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் இது குறித்து திருப்புவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்