திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
ர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்வர்யா என்பவருக்கும் லிகித் சிங் என்பவருக்கும் கடந்த மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு, கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அவரை பெற்றோர் பெற்றோர் சமாதானம் செய்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில், ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
