ஒரு கணவனை காலாவதியாக்கி இன்னொரு கணவனை கண்ணீர் அஞ்சலி போஸ்டராக்கிய புது மனைவி

x

வேளாங்கண்ணியில், பெங்களூரை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதல் மனைவியே முன்னாள் காதலனை வைத்து கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தனன், தனது காதலி எலன்மேரியை மாதா கோவிலில் வைத்து திருமணம் செய்து விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், அவரது நண்பர்கள் சாகர், ஜீவா ஆகியோர் ஜனார்த்தனனை வெளியில் அழைத்து சென்று கொலை செய்துவிட்டு தப்பினர். தொடர்ந்து, கொலையாளிகள் இருவரையும் தஞ்சையில் வைத்து கைது செய்த போலீசார், காதலி உட்பட மூவரிடமும் விசாரணை நடத்தினர். இதில், ஏற்கனவே எலன் மேரிக்கு 2 வருடங்களுக்கு முன் திருமணமானதும், இரண்டாவதாக ஜனார்த்தனனை திருமணம் செய்து அவரையும் பிடிக்காததால், தனது முன்னாள் காதலன் ஜீவாவை வைத்து ஜனார்த்தனனை கொலை செய்ததும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்