

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் உயர் கோபுரங்கள் மற்றும் டிரோன் கேமரா மூலமாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். காமராஜர் சாலை கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தாதவாறு காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கடற்கரை சாலை மற்றும் மெரினா சாலைகளில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளன.