புத்தாண்டு 2024 பொதுமக்களுடன் கேக்வெட்டி கொண்டாடிய.. சென்னை காவல் ஆணையர்..

x

புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், மொத்தம் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சந்தீப் ராய் ரத்தோர் நேற்று இரவு, அதிகாரிகளுடன் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். நள்ளிரவு 12 மணிக்கு, உழைப்பாளர் சிலை அருகே பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல், சென்னையில், அமைதியாகவும், மகிழ்ச்சியுடனும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில், சிறப்பாக பணிகள் மேற்கொண்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பாராட்டி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்