"மக்கள் - போலீஸ் இடையே இணக்கம் ஏற்படுத்துவேன்" - பொறுப்பேற்ற புதிய எஸ்.பி ஜெயக்குமார் உறுதி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் எஸ்.பி அருண் பாலகோபாலன் அனைத்து பொறுப்புகளையும் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதிய எஸ்.பி, மக்கள்- போலீஸ் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவேன் என்றார். சட்டம்-ஓழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் உறுதி அளித்தார்.
