

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட வழக்கில், நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்கள் எப்போது அரசுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், இந்த உத்தரவை பிறப்பித்தார்.