சென்னையில் புதிய நடைமுறை - இனி ஆன்லைனில் மட்டுமே..!

x

சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகை அனுமதிக்கான புதிய ஆன்லைன் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகை அமைப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் 21 மே 2025 முதல் முழுமையாக ஆன்லைனில் மட்டுமே பெறப்படும் என்றும், விண்ணப்பங்கள், ஆவணங்கள் பதிவேற்றம், கட்டணங்கள் செலுத்தல் மற்றும் நிலை கண்காணிப்பு இணையதளத்தில் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல குழு பரிசீலனை, போக்குவரத்து அனுமதி பெறப்பட்ட பின் ஒற்றை சாளர குழு இறுதி அங்கீகாரம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்மை மற்றும் ஒருங்கிணைந்த சேவைக்காக இதை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்