சென்னையில் புதிய நடைமுறை - இனி ஆன்லைனிலே கிடைக்கும்

x

பேனர் வைக்க ஆன்லைன் அனுமதி-சென்னை மாநகராட்சி புதிய நடைமுறை

சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெறும் புதிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு மாநகராட்சியின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில் தேவையான ஆவணங்களை நேரடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் நடைமுறையில் இருந்து வந்த நிலையில் இனி உரிய ஆவணங்களோடு சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்