புதிதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் சிலை கடத்தல் வழக்குகளில் முழு உண்மைகளையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏற்கனவே சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த அதிகாரி இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். புதிய அதிகாரி எந்த வித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாமல் இந்த வழக்கில் முழு உண்மைகளையும் கண்டறிந்து அதை விரைவில் வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.