ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் துவக்க அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக அரசு மருத்துவக் கல்லூகளின் எண்ணிக்கை, 26ல் இருந்து 35 ஆக உயர்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 இடங்களுக்கு அனுமதி கொண்டுள்ளதால், கூடுதலாக, ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 5 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. நாட்டிலேயே, அதிக அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மேலும், முதல்கட்டமாக வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் மருத்துவக் கல்வி வட்டாரங்களில் அடிபடுகிறது.