அஜித்குமார் மரண வழக்கில் புது தகவல்..."நள்ளிரவு 1.30 மணிக்கு தனிபடை போலீஸ் செய்த காரியம்"

x

திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில், சிறையில் உள்ள தனிப்படை போலீசார் விசாரணைக்கு சென்ற இடத்தில் செல்போன் சார்ஜரை தூக்கிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மடப்புரம் கோயில் நுழைவாயிலில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று கடையின் உரிமையாளரான மாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இதில், சம்பவத்தின்போது நள்ளிரவில் பெட்டிக்கடைக்கு வந்த தனிப்படை போலீசார், ஆய்வு என கூறி சிசிடிவி பதிவுகளை எடுத்துச் சென்றதாவும், அப்போது கடையில் இருந்த செல்போன் சார்ஜரையும் தூக்கியதாக சிபிஐ அதிகாரிகளிடம் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்