தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய அரசுப் பேருந்துகள் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். தற்போதுள்ள அரசு பேருந்துகளில் மாற்று திறனாளிகள் பயணம் செய்ய உரிய வசதிகள் இல்லை என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.