Tambaram| Smartphone | சென்னை சரவுண்டிங்கில் நடமாடும் புது விஷம கும்பல் - மக்களே ஜாக்கிரதையா இருங்க

சென்னை சரவுண்டிங்கில் நடமாடும் புது விஷம கும்பல் - மக்களே ஜாக்கிரதையா இருங்க

தாம்பரம், குரோம்பேட்டையில் செல்போன் திருடும் கும்பல் தாம்பரம், குரோம்பேட்டை பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருடும் கும்பல் நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி குறிப்பாக முதியவர்கள், பெண்களிடம் கைவரிசை காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவரிடம் செல்போனை திருட முயன்ற நபரை பயணிகள் கையும் களவுமாக பிடித்து, செல்போனை மீட்டு ஒப்படைத்தனர். செல்போன் திருட்டை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#tambaram #chrompet #news #smartphone #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com