சோழ சாம்ராஜ்ய வரலாற்றை மீட்கும் புத்த விகாரை அகழாய்வு

x

சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுக்கும் விதமாக நாகையில் புத்த விகாரை அகழாய்வு செய்யும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

நாகையில் கி.பி. 10 முதல் 13-ம் நூற்றாண்டு வரை பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் புத்தம், சமண,சமயங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இதனை உறுதிபடுத்தும் விதமாகவும், சோழ சாம்ராஜ்யமான தமிழர்களின் தொன்மைகளை மீட்டெடுக்கும் வகையிலும் புதுப்பிக்கப்பட்ட பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி புத்த விகாரை ட்ரோன் மூலம் அளவிடும் முதற்கட்ட பணியை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்