புதிய தலைமைச்செயலாளர் சண்முகம் : தமிழக அரசின் அரசாணை வெளியீடு

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சண்முகமும், காவல்துறை தலைமை இயக்குநராக திரிபாதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய தலைமைச்செயலாளர் சண்முகம் : தமிழக அரசின் அரசாணை வெளியீடு
Published on

புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நியமனம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிதித்துறை செயலாளராக இருந்து வரும் சண்முகம் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்துள்ளார். தமிழகத்தின் 46-வது தலைமைச்செயலாளராக சண்முகம், விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

இதுபோல, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரிபாதி, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல் உயர்அதிகாரி பொறுப்பை வகித்துள்ளார். 2002-ல் சிறந்த சேவைக்காக பிரதமரின் விருதையும், 2011-ல் குடியரசு தலைவர் விருதையும் பெற்றவர். ஸ்காட்லாந்து உள்ளிட்ட இரண்டு சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தற்போது, சீருடைப்பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக்கும் திரிபாதி, டிஜிபி-யாக, இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com