ரூ.441 கோடி மதிப்புள்ள ஈரடுக்கு பாலம் - பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்துநிலையம் வழியே அண்ணா பூங்கா வரை கட்டப்பட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்துநிலையம் வழியே அண்ணா பூங்கா வரை கட்டப்பட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 5 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஐந்து ரோடு பகுதியை மையமாகக் கொண்ட இது, தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த புதிய பாலத்தால், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழகத்தில் சமூக தொற்று ஏற்படவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதங்கள் மறைக்கப்படவில்லை எனக் கூறினார். அதை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் இன்னும் சமூக தொற்று ஏற்படவில்லை என திட்டவட்டமாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com