புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் - அறிமுகப்படுத்திய DAC Developers

x

இந்தியாவில் முதல்முறையாக மகளிருக்கென பிரத்யேக வசதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை பிரபல கட்டுமான நிறுவனமான DAC Developers (டேக் டெவலப்பர்ஸ்) அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. இதில் மாஃபா நிறுவனத்தின் இயக்குனர் லதா பாண்டியராஜன், நார்த்தன் யுஎன்ஐ இந்தியா அமைப்பின் இயக்குனர் சரண்யா ஜெயக்குமார், நேச்சுரல் சலூன் நிறுவனத்தின் நிறுவனர் வீனா குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து டேக் டெவலப்பர்ஸின் DAC Developers மேலாண் இயக்குனர் சதீஷ்குமார்,, அடுக்குமாடி குடியிருப்பின் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்