

இதுதொடர்பாக, மதுரையில் நியூட்ரினோ திட்டத்தின் இயக்குனர் விவேக் தத்தா, முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, நியூட்ரினோ குறித்த ஆய்வுக்காக, மதுரை வடபழஞ்சியில் வைக்கப்பட்டுள்ள கருவி மூலம், "மியூஆன்" எனும் அணு நுகரப்படுவதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தனர்.