மகனை வச்சி செய்யும் நெட்டிசன்கள் - ஓபனாக பேசிய விஜய் சேதுபதி
"தவறுகள் இருந்தா சொல்லுங்க..திருத்திக் கொள்கிறேன்" - விஜய் சேதுபதி ஓபன் டாக்
தனது மகன் சூர்யா மீதான விமர்சனங்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளிச்சு இருக்காரு. ஒரு பேட்டியில இது சம்பந்தமா பேசுன விஜய் சேதுபதி, எல்லா இடத்துலையும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்யுது, அதைத் தடுக்க முடியாது, அத எப்படி கையாள்றோம் அப்பிடிங்குறத கத்துக்கிறதுதான் முக்கியம்னு சொல்லி இருக்காரு. நான் எந்தத் தவறு செய்தாலும், இப்படி செய்துவிட்டேனே என யோசிப்பதை விட்டுவிட்டு Next என்ன செய்யலாம்னு யோசிப்பதாக கூறிய நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புறதா தெரிவிச்சு இருக்காரு. தன் மீது தவறுகள் இருந்தா சொல்லுங்க. அத அடுத்தப் படத்துல திருத்திக்கிறேன்னும், தனக்கு ரசிகர்களோட மனநிலை தான் முக்கியம்னு Open Talk கொடுத்து இருக்காரு.
Next Story
