த்ரிஷாவை வறுத்தெடுத்த நெட்டிசன்- ஆதரவுக் குரல் கொடுத்த எஸ்.வி.சேகர்

x

நடிகை த்ரிஷாவை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்த நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் எஸ்.வி.சேகர் குரல் கொடுத்துள்ளார்.

த்ரிஷாவுக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் பதிவிட்ட ஒருவர், கணவரை விட்டு வேறு ஒருவரை காதலிப்பது, கணவருடன் கோபித்துக் கொண்டு செல்வது, அல்லது கள்ளக்காதலியாக நடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபோன்ற கேரக்டர்கள்தான் உங்களைத் தேடி வருகிறதா? அல்லது நீங்கள் அதை தேர்ந்தெடுக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவை டேக் செய்து, நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவில், த்ரிஷா எப்படி நடிக்க வேண்டும், யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. பிடிச்சா பாருங்க.. இல்லை பாக்காதீங்க.. என்று குரல் கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்