Neomax Issue |ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விட உத்தரவு-அப்பாவிகள் கண்ணீருக்கு கிடைத்த நீதி
நியோமேக்ஸின் ரூ.2,000 கோடி சொத்துகளை ஏலம் விட உத்தரவு
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் 2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்களின் ஜாமின் மனுவை ரத்து செய்ய கோரிய மனு விசாரணைக்கு வந்த போது, கையகப்படுத்தப்பட்ட நியோமேக்ஸ் சொத்துகளை ஏலம் விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிலங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என தனி தனியாக பிரித்து ஏலம் விடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்... பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆயிரம் கோடி சொத்துகளில் 2 ஆயிரம் கோடி சொத்துகளை முதற்கட்டமாக ஏலம் விடவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
