இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்

மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டு காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளம்பெண் மெர்சி கொலை விவகாரம்: நீதி கேட்டு வள்ளியூரில் ஆர்ப்பாட்டம்
Published on
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கடந்த 27 ஆம்தேதி மெர்சி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மெர்ஸி கொலைக்கு நீதி கேட்டும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன், 25 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் காமராஜர் ஆதித்தனார் கழகம் மற்றும் அனைத்து நாடார் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு முன்பு சிங்கை முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், பா.ம.க மாநில பொருளாளர் திலகவதி பாமா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com