திடீரென தீக்குளித்த முதியவர் - பரபரப்பு
நெல்லை டவுன் ஆர்ச் அருகே, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் முதியவர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து, ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்த நபர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ராஜா என்பது தெரியவந்த நிலையில், எதற்காக தீக்குளித்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
