"எங்க வேதனை அவ்வளவு இருக்கு... யார் கிட்ட சொல்ல முடியும்" - நெல்லையில் குமுறும் மக்கள்

x

நெல்லையில் முதலமைச்சர் ஸ்டாலின், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார். அரசு விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. முன்னதாக, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முதல்வரை சந்திக்க காத்திருந்த நிலையில், அவர்களை அனுமதிக்கவில்லையெனக் கூறி போராட்டத்தில் ஈடுப்டடனர். இதையடுத்து 10 பேரை மட்டும் அதிகாரிகள் அழைத்துச் சென்று முதல்வரை சந்திக்க வைத்தனர். பின்னர், நலத்திட்ட விழாவிற்கு காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சுற்றுலா மாளிகை முன்பு நின்றிருந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். ஆனால் தங்களை முதல்வர் சந்தித்து பேசாமல், மனுக்களை மட்டும் பெற்றிருப்பது வேதனை அளிப்பதாக, மாஞ்சோலை தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்