Nellaiyappar Temple | நெல்லையப்பர் கோயில் விவகாரம் - மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்

மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர்

Nellaiyappar Temple | நெல்லையப்பர் கோயில் விவகாரம் - மன்னிப்பு கேட்ட சமூக ஆர்வலர் #NellaiyapparTemple #thanthitv நெல்லை நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் இன சிறுவர்களை அனுமதிக்காததாக செய்திகள் வெளியான நிலையில், கோவில் நிர்வாகத்திடமும், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் மன்னிப்புக்கு கோருவதாக, தகவலை பதிவிட்ட சமூக ஆர்வலர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம் விருந்தில் உணவு காலியான காரணத்தால், சிறுவர்களிடம் முறையாக தகவலை சொல்லி அனுப்பி வைத்தோம் என தெரிவித்து இருந்தது. மேலும் கோயில் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, உண்மைக்கு புறமான தகவலை விளம்பர நோக்கத்துடன் சமூக அலுவலர் பரப்பியதாகவும் கோவில் நிர்வாகம் கூறியது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டேவிட் ராஜா, எந்த உள்நோக்கத்துடனும் தான் செயல்படவில்லை என கூறியும் மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com