நெல்லையப்பர் கோயில் திருவிழா- சாதிய அடையாளங்களுக்கு அதிரடி தடை

x

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி தேர் திருவிழா சாதிய அடையாளங்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆனி தேர் திருவிழாவின் போது சாதிய கொடிகள், கலர் பட்டாசுகள், டீ சர்ட் பயன்படுத்த தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் மாதவன் மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சாதிய அடையாளங்கள் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே உரிய விதிமுறைகள் உள்ளதால் அதனை தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்