Nellai Theft | "வீட்டுல 1 ரூபாய் இல்ல எதுக்கு இத்தனை கேமரா.. போங்கடா.." - பரவும் திருடனின் கடிதம்
- பணமே இல்லை எதற்கு இத்தனை சிசிடிவி கேமரா? - பரவும் திருடனின் கடிதம்
- நெல்லை பழையபேட்டையில் வீட்டில் திருட சென்ற திருடன், வீட்டு உரிமையாளருக்கு வேடிக்கையாக கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். வீட்டில் திருட சென்ற மர்ம நபர்கள், நகை, பணம் ஏதும் இல்லாததால் 2 ஆயிரம் மதிப்பிலான உண்டியலை திருடி சென்றுள்ளனர். அவர்கள் செல்லும் போது வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை எனவும், அடுத்த முறை யாராவது திருட வந்தால் ஏமாறாமல் இருக்க பணம் வைக்கவும் என்றும் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளனர். மேலும் பணமே இல்லை எதற்கு இத்தனை கேமரா எனவும் மன்னித்து விடுங்கள் இப்படிக்கு திருடன் என்றும் குறிப்பிட்டது வேடிக்கையாக உள்ளது. உசாராக சிசிடிவி கேமரா ஹாட் டிஸ்க்கையும் திருடி சென்றுள்ளனர்.
Next Story
