Nellai | Temple Festival | 10 நாட்களுக்கு ஹோட்டல்களிலும் நோ நான்-வெஜ்

முத்துமாலை அம்மன் கோயில் திருவிழா - அசைவ உணவுகளுக்கு தடை நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மாமிச உணவு விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனி திருவிழா வெகு விமர்சையாக நேற்று தொடங்கியது. கோயில் திருவிழாவையொட்டி முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இறைச்சிகள் விற்பனை செய்யவும், ஓட்டல்களில் அசைவ உணவுகள் விற்பனைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் பகுதியில் உள்ள எந்த ஓட்டல்களிலும் 10 நாட்களுக்கு அசைவ உணவு இல்லாமல் சைவ உணவு மட்டுமே சமைக்கப்படுகிறது. இந்த கட்டுபாட்டினை அப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக கடைபிடித்து வரும் நிலையில். இதுகுறித்து அறிவிப்பு போஸ்டர்களும் முக்கூடல் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன..

X

Thanthi TV
www.thanthitv.com