Nellai Special Train | நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்பு
தசரா விழாவை ஒட்டி திருநெல்வேலி மைசூர் இடையே சிறப்பு ரயில் சேவை
தசரா விழாவை ஒட்டி திருநெல்வேலி மைசூர் இடையே பெங்களூர் வழியாக, சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வருகின்ற 15-ஆம் தேதி முதல் நவம்பர் 24-ஆம் தேதி வரை மைசூரில் இருந்து திருநெல்வேலிக்கு, திங்கட்கிழமை மட்டும் இயங்கும் வகையில் சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை மைசூரில் இருந்து இரவு 8.51 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், செவ்வாய் கிழமை காலை 11.30 மணிக்கு திருநெல்வேலிக்கு சென்று அடைகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் செவ்வாய் கிழமை மதியம் திருநெல்வேலியில் இருந்து 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், புதன்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு மைசூர் சென்று அடைகிறது.
Next Story
