நெல்லையில் திடீரென தீப்பிடித்து எரிந்த 2 தனியார் பேருந்துகள் - கருகிய அதிர்ச்சி காட்சிகள்
நெல்லை தச்சநல்லூரில் தனியார் பேருந்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. பழுதான பேருந்துகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு பேருந்தில் திடீரென பற்றிய தீ, மளமளவென பரவியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், தீ அருகே இருந்த பேருந்துக்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். எனினும் ஒரு பேருந்து தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்தது.
Next Story
