Nellai Kavin Case Update | "நான் பார்க்கவில்லை" - கவின் தாய் வாக்குமூலத்தால் அதிர்ச்சி திருப்பம்?
கவின் கொலை செய்யப்பட்டதை பார்க்கவில்லை என அவரது தாயார் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில் அவரது தாயார் கொலையை நேரில் பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இது தொடர்பாக காதலித்தாக கூறப்படும் பெண்ணின் தந்தை சரவணன், சகோதரன் சுர்ஜித், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .
இந்நிலையில் ஜெயபால் தாக்கல் செய்த ஜாமின் மனு நெல்லை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கவினின் தாய் தனது மகன் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்க்கவில்லை என சிபிசிஐடி விசாரணையில் கூறியிருப்பதை அவரது வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதாக தெரிகிறது
பொய்யான வாக்குமூலம் அடிப்படையில் 3 பேரும் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் கூறியிருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
