Nellai Kavin Case | கவின் படுகொலை சம்பவம் ஈரம் காய்வதற்குள் நெல்லையில் அடுத்த பயங்கரம்
நெல்லையில் மாற்றுச் சமூக பெண்ணிடம் பேசிய மாணவருக்கு அரிவாள் வெட்டு
நெல்லையில்,16 வயது மாணவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பேசி வந்ததால், பெண்ணின் உறவினர்களான 5 சிறார்கள் வீடு புகுந்து மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளனர். சேரன்மகாதேவியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட சிறார்களை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். நெல்லையில் காதல் காரணமாக கடந்த 27ம் தேதி ஐடி ஊழியர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்களுக்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
