Nellai | Jail Attack | அதிகாரிகளை தாக்கிய விசாரணைக் கைதிகள் | பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு

அதிகாரிகளை தாக்கிய விசாரணைக் கைதிகள் | பாளையங்கோட்டை சிறையில் பரபரப்பு

Nellai | JailAttack | அதிகாரிகளை தாக்கிய விசாரணைக் கைதிகள் | பாளையங்கோட்டை சிறையில் பெரும் பரபரப்பு #nellai #jailattack #jail #crime #TNPolice #Thanthitv பாளையங்கோட்டை சிறையில் அதிகாரிகள் மீது தாக்குதல்- விசாரணை கைதிகள் கைது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு விசாரணைக் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற சிறை வார்டன் மணிகண்டன் மற்றும் உதவி சிறை அதிகாரி காசி பாண்டியன் ஆகியோரை இரண்டு கைதிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சுந்தரம் மற்றும் மானூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த இரண்டு அதிகாரிகளும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com