நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது.
நெல்லையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா
Published on

நெல்லையில், மழை சிறப்பாக பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி இந்திர விழா நடைபெற்றது. தாமிரபரணி நதியில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு அதில் பசு மற்றும் கன்று செய்து அதற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, முளைப்பாரி வைத்து இந்திரனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நெல்லை டவுன் நான்கு ரத வீதிகளிலும் பசு கன்று மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்தில் கரைத்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து வழிபாடு நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com