Nellai | Govt Bus | TVK | அரசுப்பேருந்தில் ஒளிபரப்பான `தவெக' பெயர் | நெல்லையில் அதிர்ச்சி
Nellai | Govt Bus | TVK | அரசுப்பேருந்தில் ஒளிபரப்பான `தவெக' பெயர் | நெல்லையில் அதிர்ச்சி
அரசுப்பேருந்தில் ஒளிபரப்பான `தவெக' பெயர் | நெல்லையில் அதிர்ச்சி
அரசுப் பேருந்து பெயர்ப் பலகையில் “தமிழக வெற்றிக் கழகம்“ திருநெல்வேலி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பேருந்து ஒன்றில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயர் டிஜிட்டல் பெயர்ப் பலகையில் ஒளிபரப்பானது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஊர்ப் பெயர்கள் இடம்பெறும் அந்தப் பகுதியில், விஜய்யின் தவெக கட்சியின் பெயர் மின்னியதைக் கண்ட அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அரசுப் பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து விவாதங்களும் எழுந்துள்ளன.
