உயிரிழந்த பெண் யானை, கட்டியணைத்து கதறிய பாகன்..!

நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 85 வயதான யானை சுந்தரி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் யானை, கட்டியணைத்து கதறிய பாகன்..!
Published on

கடந்த மாதம் 14-ஆம் தேதி யானைக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, பராமரிக்க முடியாததால் யானையை அரசே பராமரிக்க வேண்டும் என பாகன் அசன்மைதீன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து யானையை ராஜபாளையத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி பராமரிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், யானை நேற்று மாலை உயிரிழந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகன் அசன் மைதீன், யானையை கட்டி அணைத்து அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com