

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில்கள் நாளை முதல் வரும் டிசம்பர் மாதம் வரை சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து இயக்கப்பட்ட
அந்த ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து செல்வதால் வயதானவர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று ரயில் பயணிப்போர் சங்கம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு ரயில்களை அதிக இடவசதியுள்ள சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.