Nellai | அபாயம் "எப்ப வேணாலும் விழுகும்.." - பயத்திலேயே செல்லும் மக்கள்

அபாயம் "எப்ப வேணாலும் விழுகும்.." - பயத்திலேயே செல்லும் மக்கள்

அபாயம் "எப்ப வேணாலும் விழுகும்.." - பயத்திலேயே செல்லும் மக்கள் #bridge #nellai #thanthitv திருநெல்வேலி–தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தில் மீண்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழித்தடத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தால், மேற்பரப்பு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் சேதமடைந்த பகுதியை பேரிகார்டுகள் வைத்து தற்காலிகமாக மூடியுள்ளனர். தூத்துக்குடி துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலம் வழியாகச் செல்வதால், விபத்து ஏற்படும் முன்பே பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com