Nellai Car Issue | அரபோதையில் அழிச்சாட்டியம் - காரை சம்பவம் செய்து அலறவிட்ட மக்கள்

x

குடிபோதையில் தாறுமாறாக ஓடிய காரை கல்லை வீசி நிறுத்திய பொதுமக்கள்

நெல்லையில் குடிபோதையால் தாறுமாறாக இயக்கப்பட்ட காரை, பொதுமக்கள் கல்லை எறிந்து நிறுத்தினர். கொக்கிரகுளம் வண்ணாரப்பேட்டை சாலையில் கார் ஒன்று அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அந்த காரின் மீது பொதுமக்கள் கல்லை எறியவே, கார் நின்றது. காரை ஓட்டி வந்த சாந்திநகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் போதையில் இருந்ததும் தெரியவந்தது. செல்வகுமார் தப்பி ஓட முயற்சிக்கவே, அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்