உயிர் பிரியும் கடைசி நொடியில் பல உயிர்களை காப்பாற்றிய டிரைவர்
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளிங்குடியிலிருந்து, நாகர் கோயிலுக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. பேருந்தை மாரியப்பன் என்ற ஓட்டுநர் இயக்கி சென்றார். தெற்கு மெயின் ரோடு அருகே மாரியப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, இருக்கையில் மயங்கி சரிந்தார். சிகிச்சைக்காக அவரை மருத்துவமனை தூக்கி சென்ற நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிர் போகும் தருவாயிலும் டிரைவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி பயணிகளை பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
