Nellai | Aadiamavasai | ஸ்டார் ஓட்டல் பஃபேவை மிஞ்சிய அன்னதானம்.. சம்பவம் செய்த நெல்லைக்காரங்க

ஸ்டார் ஓட்டல் பஃபேவை மிஞ்சிய அன்னதானம்.. சம்பவம் செய்த நெல்லைக்காரங்க

Nellai | Aadiamavasai | ஸ்டார் ஓட்டல் பஃபேவை மிஞ்சிய அன்னதானம்.. சம்பவம் செய்த நெல்லைக்காரங்க

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் உள்ள குமாரசுவாமி கோவில் முன்பு, நண்பர்கள் இணைந்து சிறப்பு அன்னதானத்தை நடத்தினர். இனிப்பு, வடை, சாதம், பருப்பு, நெய், பலாக்காய் சாம்பார், ரசம், தயிர், இரண்டு வகை பாயாசம், அப்பளம், ஊறுகாய், பொரியல், அவியல், வத்தக்குழம்பு, நெய் போளி, பழம், தாம்பூலம் என மொத்தம் 21 வகை உணவுகள் பரிமாறப்பட்டன. ஸ்டார் ஓட்டல் பஃபே போல் வரிசையாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை சுவைக்க, ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்னோர்களை நினைவுகூர்ந்து, பசித்தோருக்கு வயிறார உணவு வழங்கும் வகையில் நடைபெற்ற இந்த அன்னதானம், பொதுமக்களிடம் பாராட்டை பெற்றது

X

Thanthi TV
www.thanthitv.com