மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழப்பு? வெகுண்டெழுந்த உறவினர்கள்

x

திருப்பத்தூரில் அரசு மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கண்களில் கருப்பு துணிகளை கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி தனலட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக கடந்த 17ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், திடீரென குழந்தையின் உயிருக்கு ஆபத்து எனக் கூறி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில், குழந்தை பாதி வழியில் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் இறப்புக்கு காரணம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களே எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்