

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், மாணவனின் தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வெங்கடேசனின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.