மின்னல் வேகத்தில் வந்த நீட் மாணவி - உணர்ச்சிவசத்தில் போலீஸ் செய்த செயல்

x

நீட் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவியை ஆரவாரம் செய்து அனுப்பிய போலீஸ்

சென்னை சேத்துப்பட்டில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி புகைப்படத்தை மறந்து விட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தேர்வு மையம் முன்பு காத்திருந்த பெற்றோர், காவலர்கள் உதவியுடன் சென்று மாணவி புகைப்படத்தை எடுத்து கொண்டு வந்தார். இதனால் தாமதம் ஆன நிலையில், மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை என தெரிகிறது. அப்போது அங்கிருந்த பெற்றோர்கள், 2 நிமிடம் தானே தாமதம் உள்ளே அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்த நிலையில், மாணவி உள்ளே அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து பெற்றோர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்