தமிழகத்தில் NEET-மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

x

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு வரும் 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் மட்டும் 31 மாவட்டங்களில் 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அதே நேரத்தில், பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், தேனி ஆகிய ஏழு மாவட்டங்களின் பெயர்கள் தேசிய தேர்வு முகமை பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அருகில் உள்ள பழைய ஒருங்கிணைந்த மாவட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்