நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை

x

சேலத்தில் மூன்றாவது முறையாக நீட்தேர்வு எழுதிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை....சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் இதற்கு முன்பு இரண்டு முறை நீட்தேர்வு எழுதி இருந்தார் .

போதிய மதிப்பெண் எடுக்காததால் தற்போது நடந்த நீட்தேர்வை மூன்றாவது முறையாக கௌதம் எழுதியிருந்தார். இந்த தேர்வில் கௌதம் சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. இதனால் கௌதம் கடந்த சில நாட்களாக வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் அவனது பெற்றோர் இல்லாதபோது நேற்று இரவு கௌதம் வீட்டில் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.

கௌதமனின் தாயார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்