மே 4-ல் நீட் நுழைவுத் தேர்வு - ``ரெடியா இருக்கோம்''.. சென்னை மாணவிகள் சொன்ன தகவல்
வரும் மே 4-ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களும் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 299 மாணவ, மாணவிகள், நீட் தேர்வுக்கு பயின்று வருகின்றனர். தேர்வு தொடர்பாக பேசிய மாணவிகள், நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்.
Next Story
